நன்றாக அறிமுகமான நண்பராக இருந்தால் புரிதல் எளி தாக இருக்கும் என்று காதல் திருமணத்தை ஆதரிக்கிறார்கள். நல்ல நண்பர்கள் என்று அழைக்கப்படும் ஆண்-பெண் நட் பில் பெரும்பாலும் இறுதி நிலை காதலில் விழுந்துவிடுகிறது.
இன்றைய சூழலில் பெற்றோர்களும் இருவரும் ஒருவரையொருவர் புரிந்து திருமணம் முடித்துகொள்வது வாழ்க்கை முழுவ தும் அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் என்று காதல் திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்கிறார்கள். நட்பாக இருந் தாலே போதும் என்று பழகும் பருவவயதைக் கடந்த ஆணும் பெண்ணும் காதல் என்னும் நிலையை எட்டிவிடுவதைக் கூட சமயத்தில் உணர்வதில்லை. அப்படியே உணர்ந்தாலும் அடுத்தவரது மனநிலை எப்படி இருக்குமோ என்று பயந்து காதலை வெளிப்படுத்துவதில் தயக்கம் காட்டுகிறார்கள்.
முன்பின் அறியாத ஒருவரை திருமணம் புரிந்துகொள்வதை விட