ஜோஹோ (zoho) என்ற நிறுவனத்தின்நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பதவி வகித்து வருபவர் ஸ்ரீதர் வேம்பு. இவர் ஜோஹோ அலுவலக தொகுப்பு (zoho office suite) உள்ளிட்ட நிறைய வணிக ரீதியான பயன்பாட்டு செயலிகளை உருவாக்கியுள்ளார்.எந்தவொரு முதலீடும் இல்லாமல் பூச்சியத்திலிருந்து தொடங்கியது போல்பல கோடி மதிப்புள்ள ஜோஹோ கார்போரேஷனை மைக்ரோசாப்ட், கூகிள், ஆரக்கிள் மற்றும் சேல்ஸ்போர்ஸ் போன்ற பெருமுதலைகளுக்கு போட்டியாக மட்டுமல்லாமல் அவர்களின் பணத்தில் இவரது செயலிகள் செயல்பட்டு வருகின்றன.
ஒரு புத்திசாலித்தனமான அதிகம் அறியப்படாத ஒரு தொழில் முனைவராக, நிறைய தொடக்க நிலை நிறுவனங்களின் மிகப்பெரும் முன்மாதிரியாக கொண்டுள்ளார்.முக்கியமாக துணிகர மூலதனம் எனும் joint venture பணத்தை மறுத்தவராவார்.